ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
நடிகர் தனுஷை வைத்து இயக்குனர் ஆனந்த் எல் ராய், பாலிவுட்டில் ராஞ்சனா மற்றும் அட்ரங்கி ரே ஆகிய படங்களை ஏற்கனவே இயக்கினார். தற்போது மீண்டும் தனுஷை வைத்து ஹிந்தியில் தேரே இஸ்க் மெய்ன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் பிஸியாக இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளி விட்டுவிட்டு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே வாரணாசி மற்றும் டில்லியில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், தற்போது மும்பையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் கிர்த்தி சனோன். அவருக்கு இந்த படத்தில் இறுதி கட்டப்பட படப்பிடிப்பு இதுவாகும். இந்த கதாபாத்திரத்திற்காக இதுவரை இல்லாத வகையில் நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை கிர்த்தி சனோன் வெளிப்படுத்தி உள்ளாராம்.