சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

சந்தேகமே இல்லாமல் கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டார் லோகேஷ் கனகராஜ். ஒரு இயக்குனரின் படிப்படியான திரையுலக வளர்ச்சியான முதல் படத்தில் அறிமுக நடிகர், பிறகு கார்த்தி, விஜய், கமல், அடுத்து ரஜினி என தமிழ் சினிமாவில் தனது இலக்கை நோக்கி மிக சரியாக நகர்ந்து சாதித்து இருக்கிறார் லோகேஷ். தற்போது ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கியுள்ள கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
அடுத்ததாக நீண்ட நாள் காத்திருக்கும் கைதி 2 படத்தின் படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் துவங்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் கமலும் விக்ரம் 2வுக்காக காத்திருக்கிறார் என்றும் ஒரு தகவல் இருக்கிறது. அதே சமயம் கூலி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானை அழைத்து வந்து நடிக்க வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தற்போது அமீர்கான் நடிப்பில் வரும் ஜூன் 20ஆம் தேதி பாலிவுட்டில் சித்தாரே ஜமீன் பர் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அமீர்கான் பேசும்போது, “நானும், லோகேஷ் கனகராஜும் ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்காக ஒன்றிணைந்து வேலை பார்த்து வருகிறோம். அது மிகப் பிரமாண்ட அளவில் உருவாகும் ஆக்ஷன் படமாக இருக்கும். அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு பிறகு அதன் படப்பிடிப்பு துவங்கும்” இன்று வெளிப்படையாகவே ஒரு தகவலை கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல 2014ல் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் அவர் நடிப்பில் வெளியான பிகே படத்தின் இரண்டாம் பாகத்தில அவர் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த செய்தி குறித்து அவர் கூறும்போது, “அந்த செய்தியில் உண்மையில்லை. பிகேவுக்கு இரண்டாம் பாகம் எடுக்கப்படவில்லை. அதேசமயம் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாஹேப் பால்கேவின் சுயசரிதை படத்தில் நான் நடிக்க இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார் அமீர்கான்.