மீண்டும் படப்பிடிப்பில் பவன் கல்யாண் | வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன் | விஜய் கட்சியில் இணைந்த வாழை பட நடிகர் பொன்வேல் | 12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் |
கமல் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படம் பற்றிய சுவாரஸ்யங்களை சில தினங்களுக்கு முன் கமல் பகிர்ந்திருந்தார். இதற்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், "உங்களின் தசாவதாரம் படம் ஒரு பிஎச்டி என்றால், மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு டிகிரி படிப்பு போல. இந்த படத்தையும் எப்படி படமாக்கினீர்கள் என்று கூற முடியுமா'' என கமலுக்கு கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்துள்ள கமல், ‛‛விரைவில் சொல்கிறேன். ஆனால் உங்களால் அதில் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. என்னை பொறுத்தவரை அது ஒரு மாஸ்டர் கிளாஸ் படிப்பு. அதைப்பற்றி இத்தனை ஆண்டுகள் கழித்து பேசுவது எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தரும்'' என்கிறார்.