அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் படங்களில் நடித்து வரும் ஆர்யா, இவற்றுடன் தனது 36வது படமாக ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இந்த படத்திற்கு எம்புரான் பட கதாசிரியர் முரளி கோபி கதை எழுதி உள்ளார். ரெஜினா, நிகிலா விமல் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து மலையாளம் மற்றும் தமிழ் நடிகர்களும் நடித்துள்ளனர்.
ஒரேநேரத்தில் தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்த படத்திற்கு ‛அனந்தன் காடு' என பெயரிட்டு முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர். காட்டை பின்னணியாக கொண்டு அங்கு வாழும் மக்கள், அரசாங்கம் இடையே நடக்கும் போராட்டம் தான் கதை களமாக இருக்கும் என டீசரை பார்க்கையில் தெரிகிறது. ஆர்யா புரட்சிகர நபர் போன்று நடித்துள்ளார்.