படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
'செல்வம்' என்றால் பணம் என்ற ஒரு அர்த்தம் இருக்கிறது என்பது இந்தக் கால இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 'குபேரன்' இந்து மதத்தில் செல்வத்தின் கடவுகளாக இருப்பவர். பலரது வீட்டில் குபேரன் சிலைகள் இருக்கும். சரி, செய்திக்கு வருவோம்.
தமிழ் சினிமாவின் கடந்து போன இந்த ஐந்து மாதங்களில் செல்வத்தைக் கொட்டிக் கொடுக்காமலேயே போய்விட்டன சில பெரிய படங்கள். அதிகம் எதிர்பார்த்து, ஏமாந்து நிற்கிறார்கள் திரையுலகினர். அப்படிப்பட்ட படங்களை வாங்கிய வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் இந்த வருடத்தில் இனி வர உள்ள படங்களாவது தங்களை கரை சேர்க்குமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த ஜுன் மாதத்தில் இரண்டு படங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள். ஒன்று 'தக் லைப்', அதன் ரிசல்ட் என்னவென்பது ரசிகர்களுக்குத் தெரிந்துவிட்டது. அடுத்த படம் 'குபேரா'. சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள படம். ஜுன் 20ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது.
படத்தின் டிரைலர் படம் மீதான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. தனுஷ் நடித்து, இயக்கி கடந்த வருடம் வெளிவந்த 'ராயன்' படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றது. அதற்கடுத்து வெளிவரும் படம் 'குபேரா'. மாதத்திற்கு ஒரு படமாவது வெற்றி பெற்றால்தான் திரையுலகிற்கும் நல்லது. உண்மையைச் சொல்லப் போனால் அதுவே போதாதுதான். இருந்தாலும் இந்த மாத வெளியீட்டில் 'குபேரா' மட்டுமே இப்போதைக்கான நம்பிக்கை, எதிர்பார்ப்பு.