நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ |
மலையாள திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகரான சீனிவாசனின் மகன்கள் தான் வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன். இதில் வினித் சீனிவாசன் நடிகராகவும் இயக்குனராகவும் கேரளாவையும் தாண்டி தமிழகம் வரை நன்கு அறிமுகம் ஆகிவிட்டார். அண்ணன் வழியிலேயே தம்பியும் நடிகராக மாறி பின்னர் இயக்குனராகவும் மாறினார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, நிவின்பாலி இணைந்து நடித்த 'லவ் ஆக்சன் ட்ராமா' என்கிற படத்தை இவர் இயக்கினார். அந்த படம் வெற்றி படமாக அமைந்தாலும் அடுத்தடுத்து படங்களை இயக்காமல் பிஸியான நடிகராக தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் திலீப் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணமும் உண்டு. கடந்த மாதம் திலீப் நடிப்பில் அவரது 150வது படமாக 'பிரின்ஸ் அன்ட் பேமிலி' என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் திலீப்பின் தம்பியாக நடித்திருந்தார் தியான் சீனிவாசன். அது மட்டுமல்ல, இதற்கு அடுத்ததாக திலீப் நடித்து வரும் 'பா பா பா' படத்திலும் அவருடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் ஒரு நல்ல நட்பு உருவாகிவிட்டது. இந்த சமயத்தில் தியான் சீனிவாசன் சொன்ன கதை திலீப்பிற்கு பிடித்துப்போய் விட்டதால் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்துள்ளாராம் திலீப்.