தமிழ் படத்தில் வில்லனாக நடிக்கும் சிராக் ஜானி | பிளாஷ்பேக் : சிவாஜி பட ரீமேக்கில் கமல் | பிளாஷ்பேக் : பானுமதிக்கு ஜோடியாக நடித்த தங்கவேலு | விஜய் பிரியா விடை கொடுப்பாரா?, பிரிவு உபசார விழா நடக்குமா? | விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? |

பிரபல மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் அவருக்கும் இந்த குற்றத்திற்கும் சம்பந்தமில்லை என விடுவிக்கப்பட்டார். ஆனாலும் பொதுமக்களிடம் இந்த தீர்ப்பு குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் தொட்டிப்பாலம் என்கிற இடத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு கிளம்பிய பேருந்து ஒன்றில் திலீப் நடித்த 'இ பறக்கும் தளிக' என்கிற படம் பேருந்தில் உள்ள டிவியில் திரையிடப்பட்டது. அந்த படத்தை பார்த்த அந்த பேருந்தில் பயணித்த ராஷ்மி சேகர் என்கிற பெண்ணின் மகன் டிவியில் திலீப்பை பார்த்ததும் கோபம் அடைந்து திட்ட ஆரம்பித்து படத்தை நிறுத்தும்படி கூறியுள்ளார்.
மகனின் கோபத்தை தணிப்பதற்காக நடத்துனரை அழைத்து திலீப்பின் படத்தை நிறுத்தும்படியும் வேறு ஏதாவது படம் போடும்படியும் அந்தப் பையனின் அம்மா கேட்க, ஆனால் நடத்துனரோ அதை ஏற்க மறுத்து படத்தை மாற்ற முடியாது என்றும் வேண்டுமானால் அடுத்த நிறுத்தத்திற்கு டிக்கெட் தருகிறேன் அங்கே இறங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து பல பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக எழுந்து திலீப்பின் படத்தை நிறுத்திவிட்டு வேறு படம் போடும்படி குரல் கொடுக்க துவங்கினர்.
பேருந்தில் இருந்த மற்றவர்கள் திலீப்பின் படம் போடுவதால் என்ன பிரச்னை, அவர்தான் குற்றம் அற்றவர் என தீர்ப்பு வந்துவிட்டதே என்று கேட்டாலும் கூட ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி திலீப்பின் படம் நிறுத்தப்பட்டு வேறு படம் திரையிடப்பட்ட பின்பு பேருந்து மீண்டும் கிளம்பியது. நடிகை கடத்தல் வழக்கில் திலீப் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டாலும் கூட பாதிக்கப்பட்ட நடிகைக்கு இன்னும் முழுமையாக நீதி கிடைக்கவில்லை என்றும் சிலர் குரல் கொடுத்து வரும் வேளையில், இப்படி பேருந்தில் நடந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.