பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
சந்தானம் நடித்த டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் யோகி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் ரவிமோகன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு ‛ப்ரோ கோட்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை ரவிமோகனே தயாரிக்கிறார். இதென்ன தலைப்பு என்று இயக்குனரிடம் கேட்டால் கதைக்கும், தலைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. விரைவில் அதை சொல்வோம் என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், ஒன்றல்ல இரண்டல்ல 4 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் முறையாக அறிவிக்கப்படும். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், அனிமல், அர்ஜூன் ரெட்டி படங்களுக்கு இசையமைத்த ஹர்சவர்தன் ரமேஸ்வர் இசையமைக்கிறார். அவர் பின்னணி இசையிலும் மிரட்டுவார். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சந்தானத்தை வைத்து நான் இயக்கிய டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்கள் கமர்ஷியலாக ஜெயித்தது. இதிலும் காமெடி இருக்கிறது. கூடுவே ஆக் ஷனும் இருக்கிறது'' என்கிறார்