மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் |
சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினத்தில் மழை பெய்ததால் ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 10ம் தேதி அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என பல ஆயிரம் மதிப்பு கொண்ட டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து, டிக்கெட் வாங்கியும் உள்ளே நுழைய முடியாதவர்கள், டிக்கெட் பிரதியை குறிப்பிட்ட மெயில் ஐடிக்கு குறைகளை குறிப்பிட்டு அனுப்புமாறு ஏ.ஆர்.ரஹ்மான் கோரியிருந்தார். இந்த நிலையில் அர்ஜூன் என்பவர் தான் ரூ.10 ஆயிரம் கொடுத்து டிக்கெட் எடுத்தும், அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியவில்லை. இதனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அர்ஜூனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.