சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த கேரள அமைச்சர் | 8 ஆண்டுகளாக நான் நினைத்ததை பேச சுதந்திரம் இல்லை : திலீப் வேதனை | எதிர்ப்புக்கு பணிந்த சந்தானம், ஆர்யா : சர்ச்சைக்குரிய 'கோவிந்தா...' பாடல் நீக்கம் | பேய்ப் படமா? பாசப் படமா? : ரசிகர்கள் ஆதரவு எந்தப் படத்திற்கு ? | தாதா சாகேப் பால்கே பயோபிக் படத்தில் ஜுனியர் என்டிஆர்? | ராஜமவுலி - மகேஷ் பாபு படத்தில் விக்ரம்? | பான் இந்தியா வரவேற்பைப் பெறுமா 'தக் லைப்' ? | கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியது: இந்திய கலைஞர்கள் ஆதிக்கம் |
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, நடிகர் கமல்ஹாசனை சந்தித்தது குறித்து அவரது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இறுதியாக நாங்கள் சந்தித்து விட்டோம். பல தசாப்தங்களாக தனது உற்சாகமூட்டும் திரை இருப்பின் மூலம் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சாத்தியமாக்கிய கமல்ஹாசனுடன் ஒரு அரட்டை. தென்னிந்தியாவில் உள்ள பலதரப்பட்ட திரையுலகினர் ஆராய்வதற்கு அதிகம் உள்ளது. அவரது பெரிய ரசிகன் நான்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 247வது சுதந்திரன தினத்தைக் கொண்டாடும் விதத்தில் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. அதில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார் செட்டி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
'தசாவதாரம்' படத்தில் அமெரிக்க அதிபர் கதாபாத்திரம் ஒன்றிலும் கமல்ஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.