சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை | கண்ணப்பா சம்பள விஷயத்தில் விஷ்ணு மஞ்சுவை மிரட்டிய மோகன்லால், பிரபாஸ் | மோகன்லால், மம்முட்டி படத்தை முடித்துவிட்டு சல்மான் கானை இயக்க தயாராகும் விஸ்வரூபம் எடிட்டர் | முக்கிய காட்சிகள் கட், பாம்புடன் வந்த ரசிகர் : கலீஜா ரீ ரிலீஸ் கலாட்டா | தமிழ் பாடல்களில் ஆங்கில ஆதிக்கம் : அனுராக் கேள்விக்கு மணிரத்னம் பதில் |
'தக் லைப்' படத்தின் நிகழ்ச்சி நடந்த போது நடிகர் கமல்ஹாசன், 'தமிழிலிருந்து பிறந்த கன்னடம்' என்று குறிப்பிட்டுப் பேசினார். அது கன்னடர்களின் மத்தியில் சர்ச்சையை எழுப்பி படத்தின் பேனர்களை கிழிப்பதில் ஆரம்பித்து, படத்திற்குத் தடை விதிக்கப்படும் அளவிற்குப் போய் உள்ளது.
கமல்ஹாசனுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்படப் பிரபலங்கள் சிலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பொதுப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பவர் என்பதில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுபோல தனது கட்சியின் பெயரிலேயே 'தமிழக வெற்றிக் கழகம்' என வைத்துள்ள, அடிக்கடி அறிக்கை வெளியிடும் விஜய்யும் இந்த விவகாரத்தில் தற்போது குறி வைக்கப்பட்டுள்ளனர்.
கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட ரஜினிகாந்த், அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கும் விஜய் ஆகியோர் இந்த சர்ச்சை விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்களா, அல்லது அறிக்கை வெளியிடுவார்களா என சமூக வலைத்தளங்களில் விவாதம் ஆரம்பமாகி உள்ளது.
'தக் லைப்' படம் அடுத்தவாரம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் என்பதுதான் இப்போதைய நிலை. மன்னிப்பு கேட்க மாட்டேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார். எனவே, ரஜினி, விஜய் இந்த விவகாரத்தில் கமலுக்கு ஆதரவு தெரிவித்தால் அவர்களது படங்களும் அங்கு வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.