2வது படத்திலேயே மேக்அப் இல்லாமல் நடித்த ரோஷ்னி | புதுமுகங்களின் காதல் கதை | பிளாஷ்பேக் : மூன்று சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்தும் சோபிக்காத மாலதி | பிளாஷ்பேக் : தமிழ் படங்களில் நடித்த நாகினி அனிதா | ஜூன் 20ல் வெளியாகும் சுரேஷ் கோபியின் திரைப்படம் 'ஜேஎஸ்கே' | 2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்ட வழக்கு : வில்லன் நடிகருக்கு சம்பந்தமில்லை | தொடரும் ஓடிடி ரிலீஸை தொடர்ந்து சோட்டா மும்பை ரீ ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | உபேந்திராவின் படங்களை இயக்கியிருந்தால் நான் எப்போதோ ஓய்வு பெற்றிருப்பேன் : இயக்குனர் சுகுமார் புகழாரம் | வெளிநாடு செல்ல நீதிமன்ற அனுமதி கேட்கும் தர்ஷன் : அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு | என் மேல நம்பிக்கை வெச்ச அஜித் : ஆதிக் உருக்கம் |
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ், 75, மாரடைப்பால் சென்னையில் காலமானார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் 49 ஆண்டுகள் நடித்துள்ளார். இவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் ரஜினி வெளியிட்ட பதிவில், ‛‛என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்'' என தெரிவித்துள்ளார்.