இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' |

தமிழகத்தில் தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. வழக்கம் போலவே இம்முறைத் தேர்தலிலும் நடிகர், நடிகையர் பலர் போட்டியிட இருக்கின்றனர். இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கத்தில் சுயேச்சையாக களமிறங்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர் தற்போது சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே சென்னை வெள்ளம், கொரோனா ஊரடங்கு போன்ற காலங்களில் தனது பகுதி மக்களுக்கு உணவு உட்பட பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார் மயில்சாமி. இதனால் அத்தொகுதியில் அவருக்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ளது. அதை கருத்தில் கொண்டே தேர்தலில் களமிறங்கி உள்ளார்.




