லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம், டாக்சிவாலா, நோட்டா, டியர் காம்ரேட் என தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உள்ளார். தமிழில் நேரடியாக நோட்டா படம் மூலம் அறிமுகமானவர், தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
இளம் நடிகர் என்பதால் உடன் நடிக்கும் நடிகைகள் பலருடனும் காதல் கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார். தொடர்ந்து இரண்டு படங்களில் உடன் நடித்த ராஷ்மிகாவும் இவரும் காதலிப்பதாக பரவலாகப் பேசப்பட்டது. அதனை இருவரும் திட்டவட்டமாக மறுத்தனர். ஆனாலும் தொடர்ந்து யாருடனாவது காதல் கிசுகிசுவில் விஜய் தேவரகொண்டாவின் பெயர் சிக்கி விடுகிறது.
அந்தவகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரின் மகளும், நடிகையுமான சாரா அலிகானும், விஜய்தேவரகொண்டாவும் காதலிப்பதாக ஒரு தகவல் வைரலாகியுள்ளது. இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்பியை சாரா சமீபத்தில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் இருந்து தான் இப்படி ஒரு தகவல் இணையத்தில் சுற்றி வருகிறது.
விஜய் தேவரகொண்டாவைப் போலவே சாரா அலிகானும் பல காதல் சர்ச்சைகளில் சிக்கியவர் தான். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஆகியோரை சாரா காதலித்ததாகவும். பின்னர் முறித்துக் கொண்டதாகவும் பாலிவுட்டில் காதல் செய்திகளில் அடிபட்டவர் சாரா அலிகான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.