இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும் : சிம்பு வேண்டுகோள் | பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா | பிளாஷ்பேக்: “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒலிப்பதிவு செய்து, வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் “ஸ்ரீவள்ளி” | விவாகரத்து பெற்ற நடிகரை காதலிக்கிறாரா மிருணாள் தாக்கூர்? | மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ் | டிரம்ப்-ன் வரிவிதிப்பு அறிவிப்பு: இந்தியப் படங்களுக்கு என்ன பாதிப்பு? | நாகார்ஜூனாவின் 100வது படம்: தமிழ் இயக்குனர் இயக்குகிறார் | கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய விஜய் | மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர் | தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் |
ராஜசேகர் இயக்கத்தில் மறைந்த நடிகர் மயில்சாமி மகன் அன்பு ஹீரோவாக நடித்த படம் எமன் கட்டளை. இதில் நெல்லை சிவா எமனாக நடித்துள்ளார். 60 நாளில் அது நடக்கும் என எமன் சொன்னது என்ன? அதற்குள் தனது காதலிக்கு ஹீரோ திருமணம் செய்து வைத்தாரா என்பது கதை.
இந்த பட நிகழ்ச்சியில் பேசிய அன்பு "என் அப்பா பலருக்கு உதவி செய்து இருக்கிறார். தன்னிடம் வசதி, பணம் இல்லாவிட்டால் கூட கடன் வாங்கி மற்றவர்களுக்கு உதவுவார். அவர் மறைந்தபின் நான் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தேடியபோது, யாரும் உதவவில்லை. பல சினிமா இயக்குனர், நடிகர்களை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எப்பவாது அவர்களே நேரில் சந்தித்தால் அப்படியா என்னை பார்க்க முயற்சி செய்தீர்களா. எனக்கு தெரியாதே என்றார்கள். அப்பாவின் நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
சினிமாக்காரர்கள் சினிமாவில் இருப்பவர்கள், இருந்தவர்கள் வாரிசுகளுக்கு உதவ வேண்டும். நான் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முயற்சி செய்கிறேன். இந்த படத்தில் அப்பா நடிக்கவில்லை. அவர் என்னுடன் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்தார். எமன் கட்டளை படத்தில் நெல்லை சிவா எமனாக நடித்துள்ளார். அவர் சின்ன டயலாக் பேசி, தன் ஸ்டைலில் சிரித்தாலே போதும், செட்டே அதிரும். அவரும் காலமாகிவிட்டது வருத்தமான விஷயம்" என்றார்.