ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
தற்போது கொரோனா தாக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், திரையரங்குகள் திறக்கப்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக புதிய படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் நல்ல வசூலை பெற்றுள்ளதுடன் பார்வையாளர்களையும் அதிக அளவில் தியேட்டருக்கு அழைத்து வந்துள்ளது. அதேசமயம் மாஸ்டருக்கு சில நாட்கள் முன்னதாக அதாவது ஜன-9ஆம் தேதி, தெலுங்கில் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் நடித்த கிராக் என்கிற படம் வெளியானது. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களையே தந்து வந்த ரவிதேஜாவுக்கு சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்து அவரது இடத்தை நிலைநிறுத்தியுள்ள இந்தப்படம் தற்போதுவரை சுமார் 5௦ கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தப்படத்துடன் வெளியாகிய ரெட் என்கிற படத்தை தவிர்த்து அடுத்தடுத்து வெளியான மற்ற படங்கள் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.. இதனையடுத்து கிராக் படம் ஓடும் தியேட்டர்களின் எண்ணிக்கை தற்போது இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரவிதேஜாவின் படங்கள் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்க இயலாமல் தியேட்டரில் இருந்து வெளியேறிய சூழலே கடந்த சில வருடங்களாக நிலவியது.. ஆனால் தற்போது, அவர் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து, அதிலும் 5௦ சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் இந்த நிலையில், இன்னும் கூடுதலாக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை தெலுங்கு திரையுலகினர் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறார்கள்.