இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் 'இட்லி கடை'. இந்த படத்தில் இவருடன் இணைந்து அருண் விஜய், ராஜ்கிரண், பார்த்திபன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இன்னும் ஒரு சில நாட்களில் வருகின்ற அக்டோபர் 1ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
இதற்காக இந்த படத்தை தனுஷ் மற்றும் படக்குழு கோவை, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் சென்று விளம்பரப்படுத்தி வருகின்றனர். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனுஷ், "இந்த படத்தில் அருண் விஜய் நடித்தற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அருண் விஜய் நடித்துள்ள 'ரெட்ட தல' படத்தை ஒரு 30 நிமிட காட்சிகள் பார்த்தேன். இந்த படம் நல்ல த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. அருமையாக வந்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.