இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த மாத இறுதியில் மலையாளத்தில் லோகா சாப்டர் 1 : சந்திரா திரைப்படம் வெளியானது. சூப்பர் உமன் கதை அம்சம் கொண்ட படமாக வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். டோமினிக் அருண் இயக்கியிருந்தார். தனது வே பார் பிலிம்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்ததுடன் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார் துல்கர் சல்மான். மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு அடுத்தடுத்த பாகங்கள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நடிகர் மம்முட்டி இந்த படத்தின் சீக்வல் ஆக உருவாகும் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை ஒரு போஸ்டருடன் வெளியிட்டார். இந்த போஸ்டரில் லெஜென்ட்கள் இளைப்பாறும் போது என்கிற டேக்லைனுடன் சார்லி கதாபாத்திரத்தில் நடித்த துல்கர் சல்மானும், மைக்கேல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள டொவினோ தாமஸும் ரிலாக்ஸாக அமர்ந்து இருப்பது போன்றும் வெளியாகி உள்ளது.
மேலும் படம் தொடர்பாக ஒரு அறிமுக வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் துல்கர், டொமினோ இடம் பெறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதை வைத்து பார்க்கையில் லோகா 2 படம் இவர்கள் பின்னணியில் உருவாகும் படமாக இருக்கும் என தெரிகிறது.