தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

ஹிந்தியில் தடாக் என்ற படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். ஆனால் இந்த படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோதே துபாயில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த ஸ்ரீதேவி அங்கு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தார். தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் நடிப்பில் அடுத்தபடியாக ‛சன்னி சன்ஸ் காரி கி துளசிகுமாரி' என்ற ஹிந்தி படம் வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தற்போது பங்கேற்று வரும் ஜான்வி கபூரிடத்தில் உங்கள் தாயாரான ஸ்ரீதேவி அளவுக்கு முன்னணி நடிகையாக முயற்சி எடுப்பீர்களா? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛என்னுடைய அம்மா மாதிரி என்னால் வரவே முடியாது. அவர் தன்னுடைய 4 வயதிலேயே நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு , மலையாளம், ஹிந்தி என 300 படங்களில் நடித்துள்ளார். அந்த அளவுக்கெல்லாம் என்னால் சினிமாவில் சாதிக்கவே முடியாது. என்றாலும் அம்மாவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக செலக்டிவ்வான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். அந்தவகையில் அம்மாவின் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதை விட அவரது பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் என்னிடத்தில் அதிகமாக உள்ளது. அதனால் மீடியாக்கள் என் அம்மாவுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்றார்.