பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது | கும்கி 2 பட ஹீரோ மதி யார் தெரியுமா? : லிங்குசாமி சொன்ன குட்டி லவ் ஸ்டோரி | காதலருடன் கட்டியணைத்து போஸ் கொடுத்த சமந்தா | 50 கோடி கிளப்பில் இணைந்த ‛டயஸ் இரே' : ஹாட்ரிக் அடித்த பிரணவ் மோகன்லால் | கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக தள்ளிப்போன விருஷபா | பான் இந்தியா படமாக வெளியாகும் ஹனி ரோஸின் ரேச்சல் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு |

பொதுவாக பிரபல ஹீரோக்கள் நடித்த ஹிட் படங்களின் பெயர்களை மீண்டும் தங்களது படங்களுக்கு வைப்பதற்கு இன்றைய தலைமுறையினர் நிறையவே ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி பட டைட்டில் கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் நடித்த கதாபாத்திர பெயர்களை வைப்பார்கள். கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் அப்படித்தான் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரங்களான ‛பில்லா ரங்கா பாட்ஷா' என்கிற பெயரிலேயே ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்னும் ஒருபடி மேலே போய் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஜோடியான கமல் ஸ்ரீதேவி பெயரிலேயே கன்னடத்தில் தற்போது ஒரு படம் வெளியாகி உள்ளது. டைட்டில் பரபரப்புக்காக கமல் ஸ்ரீதேவி என பெயர் வைக்கப்பட்டாலும் கூட இந்த படம் வித்தியாசமான பிரச்னைகளை சந்திக்கும் ஏழு பெண்களும் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் மையப்படுத்தி ஒரு மர்டர் மிஸ்ட்ரியாக தான் உருவாகி உள்ளது. இந்த வாரம் வெளியாகியுள்ள இந்த படத்தை வி.ஏ சுனில் குமார் என்பவர் இயக்கியுள்ளார்.