பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
தற்போது தெலுங்கில் ராம் சரணுக்கு ஜோடியாக 'பெத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜான்விகபூர். ஹிந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள 'சன்னி சன்ஸ்கரிக்கி துள்சி குமாரி' என்ற படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் தனது தாயாரான மறைந்த நடிகை ஸ்ரீதேவி அணிந்த ஒரு புடவையில் தானும் தோன்றி கவனம் பெற்றுள்ளார் ஜான்வி கபூர்.
அதாவது கடந்த 2017ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் விராட் கோலி-அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு நீல நிற சேலையை அணிந்து பங்கேற்றார் ஸ்ரீ தேவி. இந்த நிலையில் தற்போது 2026 ஆஸ்கர் விருது குழுவினர் கடந்த திங்கள் அன்று மும்பையில் சிறப்பு பிரிமியர் நடத்திய போது, தனது தாயார் அணிந்த அதே நீல நிற சேலையுடன் கழுத்தில் தங்க நகைகள் அணிந்தபடி பங்கேற்றுள்ளார் ஜான்வி கபூர்.