லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
இந்த தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடித்த ‛டியூட்' படம் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தின் இயக்குனர் கீர்த்தீஸ்வரன் அளித்த பேட்டி, ‛‛நான் சுதா கொங்கராவின் உதவியாளர். நான் இயக்கும் முதல் படம் இது. ரஜினிக்கு 30 வயது இருந்தால் எப்படி இருக்கும் என்கிற மாதிரியில் தான் இந்த கதையை ரெடி பண்ணேன். அது பிரதீப்பிற்கு செட்டாகிவிட்டது.
கதைப்படி ஹீரோ ஈவன்ட் மேனேஜ் கம்பெனி நடத்துபவராக வருகிறார். அதன் பின்னணியில் காதல் எமோஷன் கலந்த ஜாலியான படமாக உருவாகி உள்ளது. சென்னை பின்னணியில் கதை நடக்கிறது. அடிப்படையில் நான் பரமகுடிக்காரன் சென்னையில் வசிக்கிறேன். கமல் பிறந்த ஊரைச் சேர்ந்தவரா இருந்தாலும் ரஜினிகாந்தை மனதில் வைத்து இந்த கதை எழுதினேன். அதனால் பல இடங்களில் ஹீரோ நடிப்பில் ரஜினி சாயல் தெரியும். அதேபோல் மமிதா பேச்சு, கேரக்டர் ஸ்ரீதேவி சாயலை வெளிப்படுத்தும். படத்தில் தாலி செண்டிமெண்ட் முக்கியமான விஷயமாக இருக்கும். சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். ஒரு பாடலை பிரதீப் பாடியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் என்றாலும் எந்த இடத்திலும் என்னை இடையூறு செய்யவில்லை. தீபாவளிக்கு டியூட் தவிர்த்து பிரதீப் ரங்கநாதன் நடித்த இன்னொரு படமான எல்ஐகே வருமா என தெரியவில்லை. படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் வருகிறார். சூர்யவம்சம், பாட்டாளி காலத்து சரத்குமார் போல் அவர் கேரக்டர் ஜாலியாக இருக்கும். படம் மாஸாக இருக்கும், அதேப்போல் எமோஷனலாக முக்கியமான விஷயத்தை சொல்லும் படமாகவும் இருக்கும். ஹீரோவின் முந்தைய படங்கள் சூப்பர் ஹிட் ஆகி உள்ளதால், இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆனாலும் எனக்கு எந்த பிரஷரும் இல்லை. படத்தை ரசித்து இயக்கி இருக்கிறேன்'' என்றார்.