ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

1985ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 'பியார் ஜக்தா நகின்'. இந்தியாவின் 7 மொழிகளில் இது ரீமேக் ஆனது. கன்னட இயக்குனர் துவாரகீஷ் இதனை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார். தனது நண்பரான ரஜினியை சந்தித்து தனது திட்டத்தை கூறினார்.
ஏற்கெனவே படத்தை பார்த்திருந்த ரஜினி, உடனே அதற்கு சம்மதித்தார். அதற்கு அவர் வைத்த ஒரே நிபந்தனை படத்தின் நாயகியாக ஸ்ரீதேவி நடிக்க வேண்டும் என்பதுதான். அப்போது ஸ்ரீதேவி ஹிந்தியில் பிசியாக இருந்தால் அது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார் துவாரகீஷ்.
இந்தி படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய 'தும்சே மில்கர் நா ஜனா' பாடல் அப்படியே இடம் பெற வேண்டும், அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த பாட்டுக்கு நானும் ஸ்ரீதேவியும் இணைந்து நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே எனக்கு வரும். அதனால் ஸ்ரீதேவியிடம் நானே பேசுகிறேன் என்று கூறினார் ரஜினி.
அதன்படி ஸ்ரீதேவியுடன் பேசிய ரஜினி உடனேயே அவர் தனது ஹிந்திப் பட தேதிகளை ஒதுக்கி வைத்து விட்டு நடித்தார். அந்த படம்தான் 'நான் அடிமை இல்லை'. இந்த படத்தில் அதே 'மிஸ்ரா சிவரஞ்சனி' ராகத்தில் ஒரு ஜீவன் தான் பாடல், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜானகி குரலில், விஜய் ஆனந்த் இசையில் உருவானது. அதோடு எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், ஜானகியும் தனித்தனியாகவும் இந்த பாடலை பாடினார். படத்தில் 3 இடத்தில் இந்த பாடல் இடம் பெற்றது.