சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் |

மலையாள நடிகர் நிவின்பாலி கடந்த வருடம் இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார். அதிலும் அவர் முழு படத்தில் கதாநாயகனாக நடித்த மலையாளி ப்ரம் இந்தியா வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடந்து விட்டது. இந்த வருடத்தில் இன்னும் அவரது ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் ஆச்சரியமாக அவர் கைவசம் தற்போது கிட்டத்தட்ட ஏழு படங்கள் இருக்கின்றன. அதில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' மற்றும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்கள் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் காத்திருக்கின்றன.
இதில் நிவின்பாலி நடித்த ‛சர்வம் மாயா' திரைப்படமும் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது என்கிற அறிவிப்பை நடிகர் நிவின்பாலியே வெளியிட்டுள்ளார். ‛கண்ணப்பா' திரைப்படத்தில் நடித்துள்ள பிரீத்தி முகுந்தன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அகில் சத்யன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடித்த ‛பாச்சுவும் அற்புத விளக்கும்' என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.