திருமணம் எப்போது? நித்யா மேனன் சொன்ன பதில் | செப்டம்பரில் தொடங்கும் 'பிக்பாஸ் சீசன்-9' | என்னால் 12 மணிநேரம் கூட பணிபுரிய முடியும்! - நடிகை வித்யா பாலன் | தீபாவளி ரிலீஸ் தேதியை திட்டமிடும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | 'மார்கன்' முதல் 'கண்ணப்பா' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | ஜில்லுனு ஒரு காதலை ஞாபகப்படுத்தும் 'சூர்யா 46' பட போஸ்டர் | மீண்டும் நடிக்க வருகிறார் அப்பாஸ் | கேரளாவில் படமான சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் | தனுஷ் பட கிளைமாக்சை மாற்ற இயக்குனர் எதிர்ப்பு | இளையராஜா பெயரை நீக்கிய வனிதா |
மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள பிரம்மாண்டமான வரலாற்று படம் 'மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்'. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வீரதீர சாகச வரலாறாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இதில் மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.
மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், பிரணவ் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அசோக்செல்வன், சுகாசினி உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் மார்ச் 26-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஓணம் பண்டிகைக்கு இதன் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தப்படம் கடந்த வருடம் மார்ச்-26ஆம் தேதியே ரிலீஸாக வேண்டியது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
தற்போது கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சில வெளிநாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மிகப்பெரிய அளவில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்தால் தான் படத்திற்கான முதலீட்டையும் ஓரளவு லாபத்தையும் எடுக்க முடியும். அதனால் தான், வரும் ஆகஸ்ட் மாதம் ஓணம் பண்டிகையில் படத்தை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்களாம் அதற்குள் தியேட்டர்களில் நூறு சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளார்கள் என்றே சொல்லப்படுகிறது.