துல்கர் சல்மானுக்கு சொந்தமான மூன்றாவது காரை பறிமுதல் செய்த சுங்கத்துறை | புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் சூர்யா | மோகன்லாலின் ராவண பிரபு ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஹைதராபாத்தில் கன்னடத்தில் பேசிய சர்ச்சைக்கு ரிஷப் ஷெட்டி விளக்கம் | ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பும் சோபிதா துலிபாலா | சிரஞ்சீவி குடும்பத்தினர் பார்த்து ரசித்த 'ஓஜி' | சினிமாவிலும் கை வைத்த டிரம்ப்: இந்தியப் படங்களுக்குப் பெரும் பின்னடைவு | தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு |
தற்போது தமிழ், தெலுங்கில் புதிய பட வாய்ப்புகள் இல்லாத தமன்னா தனது தாய் மொழியான ஹிந்தியில் மட்டும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ''எப்போதுமே முன்கூட்டியே திட்டமிடும் பழக்கம் எனக்கு கிடையாது. எனது கால் போன போக்கில் ஓடிக்கொண்டே இருப்பேன். இப்படித்தான் என்னுடைய டேட்டிங் வாழ்க்கையிலும் செயல்பட்டேன். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது தாமாக நடக்கும் போது அதை நான் ஏற்றுக் கொள்வேன். அதை நான் ஒருபோதும் திரும்பத் திரும்ப தேடிச் செல்வதில்லை'' என்று தெரிவித்தார்.
பிறகு தமன்னாவிடம், ''ஜெயிலருக்கு பிறகு தயாராகும் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறீர்களா?'' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ''ரஜினியின் ஜெயிலர் படத்தில் நான் நடனமாடிய காவாலா என்ற பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. அதனால் அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் இடம்பெற ஆர்வமாக உள்ளேன். என்றாலும் அப்படக்குழுவில் இருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. தெலுங்கில் 'ஓடேலா-2' படத்திற்கு பிறகு தற்போது ஒரு புதிய படத்தில் கமிட்டாக பேச்சுவார்த்தையில் உள்ளேன்'' என்றும் தெரிவித்து இருக்கிறார்.