சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
சுஜித் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் பவன் கல்யாண், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'ஓஜி'. இப்படம் முதல் நாளில் 154 கோடி வசூலைப் பெற்றது. அதன்பிறகு கடந்த நான்கு நாட்களில் 250 கோடி வசூலைக் கடந்துள்ளது.
நான்கு நாட்களில் உலக அளவில் மொத்தமாக 252 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பவன் கல்யாண் நடித்து வெளிவந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை இந்தப் படம் புரிந்துள்ளது.
இப்படத்தின் பட்ஜெட் சுமார் 200 கோடி என்று சொல்லப்படுகிறது. தியேட்டர் வியாபாரத்துடன் மொத்த வசூலை ஒப்பிடுகையில் 80 சதவீதம் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். இன்னும் 20 சதவீதம் வசூலித்தால் படம் 'பிரேக் ஈவன்' பெற்றுவிடும். இந்த வாரம் பெரிய போட்டிகள் இல்லாததால் அது நடந்துவிடும் என்றே தெலுங்கு பாக்ஸ் ஆபீஸில் தெரிவிக்கிறார்கள்.