முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் | நடிகர் ஜெய்சங்கர் பெயரிலான சாலை திறப்பு | பாரம்பரியமிக்க ஏவிஎம் தியேட்டர் இடிப்பு | சினிமா கைவிட்டால் படிப்பை வைத்து பிழைத்துக் கொள்வேன்: சிவகார்த்திகேயன் |
சமீபத்தில் 71வது தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவில் மோகன்லால் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசும்போது, மோகன்லால் நடித்த வானப்பிரஸ்தம் மற்றும் கர்ணாபரம் ஆகிய இரண்டு படங்களில் அவரது நடிப்பு குறித்து பாராட்டி பேசினார். கேரளா வந்த மோகன்லாலிடம் செய்தியாளர்கள் இந்த இரண்டு படங்களை ஜனாதிபதி குறிப்பிட்டு பேசியது எதனால் என கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த மோகன்லால், “இந்த இரண்டு படங்களுமே கிளாசிக்கல் கலையை அடிப்படையாகக் கொண்டவை. அதில் ஒன்று சமஸ்கிருத ட்ராமா. இன்னொன்று முப்பரிமாண கலை வடிவத்தைக் கொண்டது. பெரும்பாலானோர் இதை திரைப்படங்களில் பயன்படுத்துவதில்லை. அதான்ல இந்த இரண்டு படங்களையும் அவர் குறிப்பிட்டு பேசியிருக்கலாம்” என்றார்.