மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
இப்போதெல்லாம் 10 படங்களில் ஒன்று உண்மை சம்பவத்தின் அடிப்படையிலானது என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழ் சினிமாவில் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட முதல் படம் என்று 'மின்மினி' படத்தை குறிப்பிடலாம்.
1953ம் ஆண்டு வெளியான இந்த படம் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. டி.வி.ராம்நாத், கிருஷ்ணசாமி இயக்கிய இந்த படத்தின் திரைக்கதையை டி.எஸ்.எஸ்.மணி எழுதினார். விஜயகுமார், மங்களம், கிருஷ்ணா சர்மா, மேனகாக என்ற புதுமுகங்கள் நடித்தார்கள்.
'மின்மினி'யின் நாயகன் வேடத்தில் நடித்த எம்.எஸ்.விஜயகுமார் என்பவர் ராயப்பேட்டையில் இருந்த பழைய உட்லண்ட்ஸ் ஓட்டலில் வரவேற்பாளராக இருந்தவர். 6 ஆயிரம் அடி படம் வளர்ந்த நிலையில் தயாரிப்பாளருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட படம் பாதியில் நின்றது. பின்னர் 'மின்மினி' படப்பெட்டி தயாரிப்பாளரின் கடனை அடைக்க ஏலம் விடப்பட்டது. பின்னர் ஒருவழியாக படப்பெட்டியை கைப்பற்றி மீதிப் படத்தை முடித்தார்கள்.
கோர்ட் உத்தரவின்படி ''இது ஒரு கற்பனைக் கதைதான். இதில் சித்தரிக்கப்படும் சம்பவங்கள் யாரையும் குறித்தவை அல்ல,'' என்ற அறிவிப்புடன் 'மின்மினி' வெளியானது. கொலை செய்யப்பட்ட லட்சுமிகாந்தன் சினிமா தூது, இந்து நேசன் இதழ்களை நடத்தினார். படத்தின் நாயகன் 'மின்மினி' என்ற இதழை நடத்துவது போன்று சித்தரிக்கப்பட்டது.