வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முறையாக மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் என்றாலும் அதில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி, மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது. அந்த பாடலை எழுதிய வைரமுத்துவிற்கு தேசிய விருதும் கிடைத்தது. அந்த பாடலின் மிகப்பெரிய வெற்றிக்கு சொந்தக்காரர் அந்த பாடலை பாடிய பாடகி மின்மினி. அதற்கு முன்னதாக மீரா படத்தில் இளையராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் சின்ன சின்ன ஆசை பாடல் மின்மினிக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது.
அதன் பிறகு 1993 வரை பாடல்கள் பாடிக்கொண்டிருந்த மின்மினி திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக தனது பாடும் திறனை முழுவதும் இழந்தார். பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பல்வேறு வித சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு மீண்டு(ம்) வந்த மின்மினி முன்பு போல பிசியாக இல்லாவிட்டாலும் சில படங்களில் பாடி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் மலையாள இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மின்மினி பேசும்போது, 'ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை பாடல் எனக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத் தந்தது. ஆனால் அதற்கு முன்னதாக எனக்கு ஒவ்வொரு படத்திலும் பாட வாய்ப்பு அளித்து வந்த இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய பிறகு எனக்கு அவரது இசையில் பாடும் வாய்ப்பை வழங்கவில்லை.” என்று கூறியுள்ளார் மின்மினி.