பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ஜெய்சங்கர். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்பட்டார். கடந்த 2000ம் ஆண்டில் இவர் மறைந்தார். சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்தார் ஜெய்சங்கர். இவர் வீடு இருந்த கல்லூரி சாலைக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என ஜெய்சங்கர் மகனான டாக்டர் விஜயசங்கர், முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையை ‛ஜெய்சங்கர் சாலை' என பெயர் மாற்றப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ‛ஜெய் சங்கர் சாலை' இன்று திறக்கப்பட்டது. சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் இதை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஜெய்சங்கர் மகன் டாக்டர் விஜயசங்கர் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இதேப்போல் சென்னை, மந்தைவெளிப்பாக்கம் 5வது குறுக்கு தெருவிற்கு நாடக நடிகர் எஸ்வி வெங்கடராமன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சாலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.