ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கடந்த மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒவ்வொரு நடிகர் உட்பட தமிழிலும் பல நடிகர்கள் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். அதில் சத்யராஜின் மகள்களில் ஒருவராக ஸ்ருதிஹாசன், தங்கையாக நடித்திருந்தார் நடிகை ரெபா மோனிகா ஜான் நடித்தனர். இவர் விஜய் நடித்த பிகில் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
ஆனாலும் ரஜினி படம் என்பதாலும் லோகேஷ் கனகராஜ் டைரக்சன் என்பதாலும் இந்த படத்தில் சிறிய காட்சி என்றாலும் கூட உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று படம் வெளியாவதற்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் இப்படி கொஞ்ச நேரமே வந்து போகும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததில் தனக்கு கொஞ்சம் மனக்குறை தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “உண்மையிலேயே நான் இந்த படத்தில் நடித்தபோது ஏமாற்றம் அடைந்ததோடு கொஞ்சம் அப்செட்டும் ஆனேன். எனக்கு தெரியும் இன்னும் கொஞ்சம் அதிகமாக எனக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று. ஆனால் சில நேரங்களில் நாம் நினைத்தது போல நடக்காது. இருந்தாலும் தலைவர் ரஜினிகாந்த் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி தான்” என்று கூறியுள்ளார்.