ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு | மோகன்லாலுக்கு விருது கிடைத்ததை கொண்டாடிய திரிஷ்யம் படக்குழு | 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பும் மம்முட்டி | 'ஜெய் ஹனுமான்' படம் : ரிஷப் ஷெட்டி தந்த அப்டேட் | 'குட் பேட் அக்லி' மற்றும் 'ஓஜி' ஒரே கதையா : இயக்குனர் பதில் | அடுத்து ஒரே ஒரு பெரிய ரிலீஸ் மட்டுமே… | பிளாஷ்பேக் : ரஜினிகாந்துக்கு எழுதிய கதையில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: ஹீரோவாக நடித்த ஏ.பி.நாகராஜன் | ஏஐ வீடியோக்கள், ஆபாச தளம் : டில்லி உயர்நீதி மன்றத்தில் நாகார்ஜுனா வழக்கு | ஆஸ்கருக்கு செல்லும் சூர்யா மகளின் ஆவணப்படம் |
ஏ.ஐ தொழில்நுட்பம் மற்ற துறைகளை விட சினிமாவில்தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் காட்சிகள் உருவாக்கப்பட்டு படங்களில் இணைக்கப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி திரைப்படங்கள் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் 'கண்ட்ரீஸ் அபார்ட் ஒன் பீட்டிங் ஹார்ட்' என்ற பெயரில் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டு, அது யு-டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதை இந்தியாவை சேர்ந்த சதீஷ் என்பவர் உருவாக்கி உள்ளார்.
உலகின் 7 அதியசங்களின் பின்னணியில் 7 மொழிகளில், இது உருவாகி உள்ளது. பாடல் எழுதியது, இசை அமைத்தது, பாடியது எல்லாமே ஏஐ தான்.
பாடலில் இடம் பெற்றிருக்கும் அழகிகள் திரைப்பட நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறார்கள். இப்போது ரசிகர்களின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பி இருக்கிறது.
ரசிகர்கள் ஏஐ அழகிகளை ரசிக்க ஆரம்பித்து விட்டால் நிஜ நடிகைகளுக்கு அது சவாலாகவே இருக்கும்.
வீடியோ ஆல்பம் லிங்க் : https://www.youtube.com/watch?v=VANUbT0KUcg