''பிரச்னை பண்ணக்கூடாது, ஸ்வீட் ஆக இருக்கணும்'': டிடிஎப் வாசனுக்கு அபிராமி அட்வைஸ் | சோஷியல் மீடியாவில் திடீரென வைரலான 'கிரிஜா ஓக் காட்போலி' | ஹீரோனு சொல்லாதீங்க.. கதைநாயகன்னு கூப்பிடுங்க: முனிஸ்காந்த் கெஞ்சல் | திடீரென உயரும் 'தளபதி கச்சேரி' பாடலின் 'வியூஸ்' | ப்ரூஸ் லீ படத்தின் 'இன்ஸ்பிரேஷன்' தான் 'சிவா' | தமிழ் மார்க்கெட்டை குறி வைக்கும் ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ | தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் |

தமிழக அரசின் சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த கல்வி தொடர்பான விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் பேசியதாவது :
உலகத்தில் எதுவெல்லாம் பெரிய செல்வம் என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் விட பெரிய செல்வம் கல்விதான். என்னுடைய அப்பா ஒரு வேளை சாப்பிட்டு பள்ளிக்கு சென்று படித்ததால், நான் 3 வேளையும் சாப்பிட்டு பள்ளிக்கு சென்றேன். என்னுடைய அப்பா நடந்து பள்ளிக்கூடத்துக்கு சென்றதால், நான் ஆட்டோ, ரிக்க்ஷா, பஸ், ரயில் மூலம் பள்ளி சென்றேன். ஒரு தலைமுறையில் ஒருவர் படித்தால் அதற்கு அடுத்து வரும் தலைமுறைகள் நன்றாக இருக்கும். இதை என்னுடைய குடும்பத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன்.
என்னுடைய அப்பா வீட்டில் இருந்த வசதி குறைவால் அவர் நினைத்த படிப்பை படிக்க முடிக்கவில்லை, கிடைத்த படிப்பைதான் படித்தார். அவர் ஒரு டிகிரி வாங்கினார். அவருடைய மகனான என்னை பி.இ, எம்.பி.ஏ என்று இரண்டு டிகிரி படிக்க வைத்தார். என்னுடைய அக்கா எம்.பி.பி.எஸ், எம்.டி, எப்.ஆர்.சி.பி என 3 டிகிரி முடித்துவிட்டார்.
சினிமா துறை மிகவும் சவாலானது. அங்கு சவால்கள் வரும் போதெல்லாம் எனக்கு வரும் ஒரு தைரியம் என்னவென்றால் என்னிடம் 2 டிகிரி இருக்கிறது. இங்கிருந்து என்னை அனுப்பினால் ஏதாவது வேலை செய்தாவது பிழைத்துக் கொள்ள முடியும். நான் நன்றாக படித்தேன். ஆனால் சினிமா மீதான ஆர்வத்தால் இங்கே வந்துவிட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.