தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‛பராசக்தி' படம் பொங்கலுக்கு வருகிறது. அந்த படம் 1960 கால கட்ட கதையாக நடப்பதால் படத்தில் பயன்படுத்தப்பட்ட, அதில் வருகிற, அந்த கால பொருள், அனுபவம் கொண்ட கண்காட்சியை படக்குழு உருவாக்கி உள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உருவாக்கப்பட்ட அந்த கண்காட்சி திறப்பு விழாவில் இயக்குனர் சுதா கொங்கரா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய சிவகார்த்திகேயன், ‛‛இங்கு திறமை இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதற்கு நான் நல்ல உதாரணம். இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டர் கொஞ்சமாக ஸ்டெப் கொடுத்தார். ஸ்ரீலீலா அளவுக்கு நான் ஆடவில்லை . நாங்க காலேஜில் இருந்து பார்த்த ஹீரோ ரவி மோகன். அவர் இந்த படத்துல வில்லனாக நடிக்கிறார். அதுக்கு தனி மனசு வேணும். அவரை நாங்க செட்டுல ஹீரோவாக பார்க்கிறோம். அதனால தான் அவர் பெயரை படத்துல முதல்ல போடுறோம். அவர்தான் எங்களுக்கு சீனியர்.
ஜி.வி.பிரகாஷிற்கு இது 100வது படம். அவருக்கு வாழ்த்துகள். ஜி.வி.பிரகாஷ் சின்ன குழந்தையில் இருந்து இசை அமைக்கிறாரா? என்று என் அம்மா கேட்டார். மியூசிக் டைரக்டர் என்றால் ஒரே நேரத்தில் 10, 15 படங்கள் பண்ணலாம் என்றேன். அவரை பற்றி பாடல் வெளியீட்டு விழாவில் நிறைய பேசுறேன். இந்த படம் எனக்கு 25வது படம். நான் முதல்ல வேறு படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால், இந்த பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பராசக்தி பண்ணுங்கனு சொன்னார். இந்த படம் கிடைத்தது, அந்த பராசக்தி அருளால்தான். இந்த கண்காட்சி நல்லா இருக்கும். நேரம் இருந்தால் வந்து பாருங்க. படமும் இரண்டரை மணி நேரம். 1960களுக்கு இந்த இடம் அழைத்து செல்லும். இந்த படம் முக்கியமான விஷயத்தை பேசுகிறது. அதேசமயம், பாசம், வீரம், புரட்சியை பேசுகிறது. இந்த பொங்கலுக்கு நல்ல அனுபவத்தை தரும்.
1960களில் நடந்த ஒரு விஷயத்தை பற்றி இயக்குனர் சொல்லியிருக்காங்க. இந்த படம் பண்ண முக்கியமான காரணம் இயக்குனர் சுதா. அவருக்கு பின்னர் தான் இந்த ஸ்கிரிப்ட். அவர் இந்த கதையை 4 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இருக்கிறார். ஒரு டிகிரி மாதிரி அதுக்கு வேலை செய்து இருக்கிறார். இந்த படம் பண்ணுவது தனி சவால், இயக்குனருக்கு இன்னும் தனி சவால். தலைவர் சொன்ன மாதிரி சோதனையை சந்தித்தாதல்தான் சாதனை. இப்ப படம் எடுப்பது மட்டுமல்ல, மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் முக்கியம்.
இந்த படத்துல நடித்தவர்களை இப்ப கொஞ்சமாக பேசி விடுகிறேன். இல்லாவிட்டால், அழகாக பேசிய ரவி மோகன், பேசாத சிவானு யுடியூப்ல போட்டு விடுவாங்க. இந்த படத்துல நடித்த அதர்வா எனக்கு சகோதரர் மாதிரி. அவர் அவ்வளவு ஸ்வீட் கொடுத்து என்னை எடை போட வைப்பார். அவர் உடற்பயிற்சி செய்வார். அவரின் முதல் பட பிரமோஷனுக்காக அது இது எது ஷோவுக்கு அப்பாவுடன் வந்தார். அதை நான் தொகுத்து வழங்கினேன். அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்'' என்றார்.