தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

திரைப்படத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, இந்த ஆண்டு மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலுக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. டில்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் விருது பெறுவதற்காக டில்லி புறப்பட்டபோது நேற்று கொச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் மோகன்லால் கூறியதாவது: தாதா சாகேப் பால்கே விருது எனக்கு அறிவித்து இருப்பது, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனது 48 ஆண்டு கால திரையுலக அனுபவத்தில், எனக்கு கிடைத்த மிக உயர்ந்த அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன்.
பல சாதனையாளர்கள் நடந்து சென்ற வழியில், நானும் தொடர்ந்து செல்கிறேன். நான் பணிபுரியும் சினிமா தொழில் தான் எனக்கு தெய்வம். அதே தெய்வம் தான் இந்த விருதை வழங்கி உள்ளதாக கருதுகிறேன். செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு நான் என்றும் மதிப்பளிக்கிறேன்.
தொழிலில் நாம் காட்டும் அக்கறையும், நேர்மையும், திறமையும் மட்டுமே நம்மை உயர செய்யும். இந்த விருது மலையாள திரைப்பட உலகிற்கு கிடைத்ததாக கருதி, மலையாள திரையுலகிற்கு சமர்ப்பிக்கிறேன். அதோடு அனைத்து நடிகர்களுடன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எல்லோருடன் இணைந்து நடித்ததால் தான் மோகன்லால் என்ற ஒரு நடிகர் உருவானார். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.