தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
மலையாளத்தில் கடந்த வருடம் பிரித்விராஜ் மற்றும் பசில் ஜோசப் இருவரும் நடித்த குருவாயூர் அம்பல நடையில் திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றது. இதை விபின் தாஸ் இயக்கியிருந்தார். இதற்கு முன்னதாக அவர் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்து இயக்கிய ஜெய ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் வரவேற்பு பெற்றது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக மீண்டும் பிரித்விராஜை வைத்தே சந்தோஷ் டிராபி என்கிற படத்தை இயக்குகிறார்.
இதற்கு முன்பு குருவாயூர் அம்பல நடையில் படம் காமெடி மற்றும் கமர்சியல் அம்சங்களுடன் வெளியானது. ஆனால் இந்த சந்தோஷ் ட்ராபி படத்தை இயக்குனரின் விருப்பப்படி அவரது படமாக உருவாக்கும்படி நடிகர் பிரித்விராஜ் அன்பு கட்டளை போட்டு விட்டாராம். அதனால் அதற்கேற்றபடி இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் விபின் தாஸ்.
இதில் ஒரு புதிய விஷயமாக கிட்டத்தட்ட 60 புதுமுக நடிகர்கள் பிரித்விராஜுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இது விளையாட்டு சம்பந்தமான படம் என்பதால் இத்தனை புதுமுக நடிகர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.