தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தெலுங்குத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'கிங்டம்' படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காந்தா' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாக்யஸ்ரீ போர்ஸுடன், துல்கர் சல்மானுடன் நடித்து விட்டீர்கள். அடுத்து எந்த மலையாள நடிகருடன் நடிக்க ஆர்வம் என்று கேட்டபோது, பிரித்விராஜுடன் இணைந்து ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார் பாக்யஸ்ரீ போர்ஸ். தெலுங்கில் துல்கர் சல்மான், பஹத் பாசிலை தொடர்ந்து தற்போது ராஜமவுலி இயக்கத்தில் நடிப்பதன் மூலம் நடிகர் பிரித்விராஜ் தெலுங்கில் அடி எடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.