2026 ஆஸ்கர் - இந்தியா சார்பில் தேர்வான 'ஹோம்பவுண்ட்' | விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே |
நடிகர் மம்முட்டி நடிப்பில் கடந்த வருடம் மலையாளத்தில் ‛டர்போ' என்கிற ஆக்சன் படம் வெளியானது. இந்த படத்தை ‛புலிமுருகன்' பட இயக்குனர் வைசாக் இயக்கியிருந்தார். ‛போக்கிரி ராஜா, மதுர ராஜா' ஆகிய படங்களைத் தொடர்ந்து மம்முட்டியும் வைசாக்கும் கூட்டணி சேர்ந்த மூன்றாவது படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. கடந்த வருடம் மே மாதம் இந்த படம் வெளியான நிலையில் தற்போது ஒரு வருடம் கழித்து ‛டர்போ ஜோஸ்' என்கிற புரோமோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடலை மம்முட்டியும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த நேரத்தில் இந்த பாடலை எதற்காக வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த புரோமோ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை என்பதுடன் ரசிகர்களின் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.
இது குறித்து கமெண்ட் தெரிவித்துள்ள ரசிகர்கள், “என்ன ஒரு பாடல் இது.. பாடலின் துவக்கத்திலேயே நான் இதை கேட்பதை நிறுத்தி விட்டேன் என்றும் ஒருவேளை இந்த பாடல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே வெளியாகியிருந்தால் டர்போ படத்தையே நான் பார்த்திருக்க மாட்டேன் என்றும் படம் வெளியாவதற்கு முன்பே இதை ரிலீஸ் செய்யாமல் நல்ல விஷயம் செய்தீர்கள் படக்குழுவினரே” என்றும் ரசிகர்கள் இந்த பாடலை ட்ரோல் செய்து வருகின்றனர்.