‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

'சாஹோ' பட இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓ.ஜி'. பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிவிவி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இப்படம் கடந்த வருடத்தில் திரைக்கு வருவதாக இருந்தது. இதற்கிடையில் பவன் கல்யாண் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வர் ஆனார். இதனால் ஓ.ஜி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஓ.ஜி படம் வருகின்ற செப்டம்பர் 25ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி இந்த படத்தின் டிரைலரை வருகின்ற செப்டம்பர் 21ம் தேதியன்று காலை 10:08 மணியளவில் வெளியிடுவதாக படக்குழு இன்று அறிவித்துள்ளனர்.