மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
100 கோடிக்கு மேல் படத்தின் பட்ஜெட், 500 கோடிக்கு மேல் வசூல் இதுதான் தற்போது தெலுங்கு சினிமாவின் ஹீரோக்கள் பார்முலா. இந்த வசூல் போட்டியில்தான் இன்று அனைத்து ஹீரோக்களும் உள்ளனர். படம் எத்தனை நாள் ஓடுகிறது, மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. 500 கோடி வசூல் என்கிற புரோமோ போஸ்டர் வெளியிடப்பட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்.
அந்த வகையில் உருவாகி வரும் படம் 'சம்பரலா ஏடிக்கட்டு'. சாய் துர்கா தேஜ் நடிப்பில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பான்-இந்தியா திரைப்படம். ரோஹித் இயக்கத்தில், கே. நிரஞ்சன் ரெட்டி சைதன்யா ரெட்டி ஆகியோர் தயாரிப்பில், உருவாகும் படம் 125 கோடி ரூபாய் பட்ஜெட் என்று அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாய் துர்கா தேஜ் திரைப்படப் பயணத்தில், மிகப்பெரிய திரைப்படமாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சாய் துர்கா தேஜ், இந்த படத்திற்காக தயாராகி உள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி, ஜகபதி பாபு, ஸ்ரீகாந்த், சாய் குமார், அனன்யா நாகல்லா, ரவி கிருஷ்ணா ஆகியோருடன் ஹாலிவுட் வில்லன் ஒருவரும் நடிக்கிறார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார், அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார்.