ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

கடந்த வருடம் மலையாளத்தில் இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் மார்கோ என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் செய்தாலும், படத்தில் இடம்பெற்ற அதீத வன்முறை காட்சிகளால் எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்தது. குறிப்பாக பெண்கள் இந்த படம் பார்க்க தியேட்டர் பக்கமே வரவில்லை என்பதும் மலையாள திரையுலகில் அதீத வன்முறை காட்சிகள் கொண்ட படம் என்கிற பெயரை இது பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது,
அதேசமயம் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. உன்னி முகுந்தன் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக உன்னி முகுந்தனும் இதில் ஆர்வம் காட்டிய நிலையில் அதன் பிறகு இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்று அறிவித்து பின்வாங்கினார். காரணம் இந்த படத்தின் மூலம் நிறைய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்ததால் இரண்டாம் பாகத்தில் தான் நடிக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
அதேசமயம் சமீபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறாக மலையாளத்தில் உருவாகும் மா வந்தே என்கிற படத்தில் பிரதமர் கதாபாத்திரத்தில் தான் உன்னி முகுந்தன் நடிக்க இருக்கிறார். இப்படி ஒரு படத்தில் நடிக்கும்போது வன்முறை காட்சிகள் கொண்ட படத்தில் தான் நடிப்பது சரியாக இருக்காது என்பதாலேயே அவர் விலகி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
முதல் பாக ஹீரோவும் ஒதுங்கிக் கொண்ட நிலையில் புதிய கதாநாயகனும் தேர்வாகாத நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு லார்ட் மார்க்கோ என டைட்டில் வைத்து அறிவித்துள்ளது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ஹனீப் அதேனி தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.