மோடியாக நடிக்கும் உன்னி முந்தனுக்கு உடனடியாக ஹிந்தியில் ஒப்பந்தமான இரண்டு படங்கள் | ஆயிரம் கோடி டார்கெட்டில் காந்தாரா | தமிழில் வெளியாகும் புதிய அனகோண்டா | டைரக்டரை அண்ணா என அழைத்த ப்ரீத்தி அஸ்ராணி | அசுரனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா | சக்தித் திருமகன், காந்தி கண்ணாடி வெற்றியா | மாதம்பட்டி ரங்கராஜ் மீது பாலியல் புகார்: ஜாய் கிரிசில்டாவிடம் 6 மணிநேரம் விசாரணை | காதலன் காதலியாக மாற... : காதலி காதலனாக மாற... | 'காந்தாரா சாப்டர் -1' படத்தில் ரிஷப் ஷெட்டிக்கு தமிழில் டப்பிங் கொடுத்த நடிகர் மணிகண்டன்! | சூர்யா 46வது படத்தில் அம்மா வேடத்தில் ராதிகா சரத்குமார்! |
மலையாள திரையுலகில் உணர்ச்சிபூர்வமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு. கிட்டத்தட்ட 55 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவரது டைரக்சனில், சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிருதயபூர்வம் என்கிற படம் வெளியானது. இதற்கு முன்னதாக கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு 2015ல் 'என்னும் எப்பொழுதும்' என்கிற படத்தில் தான் இவர்கள் இணைந்து பணியாற்றி இருந்தார்கள், ஆனால் இந்த இடைவெளி இயல்பான ஒன்றுதான் என்றும் ஆனால் அதற்கு முன்னதாக மோகன்லாலுடன் ஒரு கோபத்தின் காரணமாக 12 வருடங்கள் வரை அவரை வைத்து படம் இயக்காமல் தவிர்த்தேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் இயக்குனர் சத்யன் அந்திக்காடு.. இத்தனைக்கும் மோகன்லாலை வைத்து தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர்தான் சத்யன் அந்திக்காடு.
இது குறித்து அவர் கூறும்போது, “1994 ல் பிங்கமி என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கினேன். அதன்பிறகு நான் எழுதிய ஒரு கதையில் மோகன்லால் நடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்று நினைத்ததால் அவரிடம் கால்ஷீட் கேட்டேன். ஆனால் அந்த சமயத்தில் அவர் பிஸியாக இருந்ததால் அவரை வைத்து அந்த படம் இயக்க முடியவில்லை. அதனால் அவர் மீது எனக்கு அப்போது ஒரு கோபம் ஏற்பட்டது. அந்த கோபத்தில் தான் அடுத்த 12 வருடங்கள் அவருடன் இணைந்து நான் பணியாற்றவே இல்லை.
அதன் பிறகு 2006ல் ரசதந்திரம் படத்தில் தான் மீண்டும் நாங்கள் இணைந்தோம். ஆனால் அப்படி 12 வருடம் கழித்து அவர் என்னுடைய படத்தில் மீண்டும் நடிக்க வந்தபோது ஏதோ நேற்று தான் என் படப்பிடிப்பில் இருந்து கிளம்பி போனார், மறுநாள் நடிக்க வந்து விட்டார் என்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. அதுதான் மோகன்லால். ஆனால் இப்படி அவர் மீது நான் கோபத்தில் இருந்தது இப்போது வரை கூட அவருக்கு தெரியாது. இந்த இடத்தில் தான் இதை சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.