இனி, நடிகர்கள் பற்றி அவதுாறாக பேசினால்..: நடிகர் சங்க பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம் | பிரபாஸ், ஜுனியர் என்டிஆர் வரிசையில் 'மிராய்' நாயகன் தேஜா சஜ்ஜா | டிரைலரைப் பார்த்தால் 'மிஸ்டர் பாரத்' மாதிரிதான் இருக்கு? | 'இட்லி கடை, ஓஜி, காந்தாரா 1' - அடுத்தடுத்து வெளியாகும் டிரைலர்கள் | ஆஸ்கர் தேர்வுக்கு ஒரு தமிழ்ப் படம் கூட இல்லையா ? | குஷி பார்ட் 2 உருவாகுமா? விஜய் மகன், ஜோதிகா மகள் நடிப்பார்களா? | ஏழு பெண்களின் பிரச்னைகளை பேசும் விதமாக ‛கமல் ஸ்ரீதேவி' பெயரில் வெளியாகி உள்ள படம் | இப்போதும் மனதை அழுத்தும் சோகம் ; அனுபமா பரமேஸ்வரன் | பொதுவெளியில் விவாதத்தை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மோகன்லால் பேசிய வார்த்தைகள் | பத்து வருட பயணத்தில் முதன்முறையாக தாய்மொழியில் நடிக்கும் சந்தோசத்தில் வர்ஷா பொல்லம்மா |
கன்னட நடிகையான ருக்மணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தில் நடித்தவர், தற்போது கன்னடத்தில் காந்தாரா சாப்டர் -1, டாக்ஸிக், தெலுங்கில் டிராகன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தில் கனகவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ருக்மணி வசந்த், தனக்கான டப்பிங்கை பேசி முடித்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும், இன்று இந்த காந்தாரா சாப்டர்-1 படத்தின் டிரைலர் செப்டம்பர் 22ஆம் தேதி பிற்பகல் 12. 45 மணிக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது .