மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
ஹிந்தியில் வித்தியாசமான படங்களை இயக்கி பிரபலமானவர் அனுராக் காஷ்யப். ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரின் ஒவ்வொரு படமும் வெவ்வேறு கதைக்களத்தில் வித்தியாசமான படைப்புகளாக இருக்கும். அந்த வகையில், அவரது அடுத்த படமாக 'நிஷான்சி' எனும் படத்தை இயக்கியுள்ளார். நாளை (செப்.,19) ரிலீசாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது அனுராக் பிஸியாக உள்ளார்.
புரமோஷன் நிகழ்ச்சியில் அனுராக் காஷ்யப் கூறியதாவது: நிஷான்சி திரைப்படம் பப்ளூ, டப்ளூ எனும் இரண்டு சகோதரர்களைப் பற்றிய கதை. ஒருவர் குற்றவாளி, மற்றொருவர் இன்ஜினியர். இந்த கதை 1986ல் துவங்கி, 2016ல் முடிவடைகிறது. 70களின் சினிமா ஞாபகங்களை தூண்டும் வகையில் காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஆயிஷ்வரி தாக்கரே அற்புதமான நடிகர். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அது மிகவும் சவாலானது. இரண்டு கதாபாத்திரங்களையும் சிறப்பாக செய்துள்ளார். நான் சினிமா துறையில் வந்ததிலிருந்து, இதுவரை நான் பார்த்த சிறந்த அறிமுகங்களில் இவரும் ஒருவர். முதல் படத்திலேயே இப்படியான கனமான நடிப்பை காண்பது அபூர்வம்.
நான் பெங்களூருக்கு குடிபெயர்ந்தது பற்றி கேட்கிறீர்கள். பெரிய நகர வாழ்க்கை எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. அமைதியான சூழல் எழுதுவதற்குத் தேவைப்பட்டது. அதனால் தான் பெங்களூருக்கு வந்தேன். நிஷான்சி படத்தின் முழு எழுத்தும் நான் பெங்களூருவில் தான் எழுதினேன். இங்குள்ள சூழல் அமைதியாக இருக்கிறது.
நடிப்பு
இயக்கத்தில் இருந்து நடிப்புக்கு வந்தது பற்றி கேட்கிறீர்கள். நடிப்பு என் விருப்பத்தால் வந்தது அல்ல, கட்டாயத்தால் வந்தது. ஒரு கட்டத்தில் நான் மன அழுத்தத்தில் இருந்தேன். அதே சமயம் என் மகள் திருமணம் செய்ய விரும்புவதாக சொன்னாள். தந்தையாக என் கடமை அதை ஆதரிப்பது. ஆனால் அந்த சமயத்தில் என்னிடம் போதுமான பணம் இல்லை. இயக்குனராக சம்பாதிக்கவே சில ஆண்டுகள் தேவைப்படும்; ஆனால் ஒரு நடிகராக இருந்தால் ஒரு மாதத்திலேயே சம்பாதித்துவிடலாம். அதனால் தான் நடிக்க துவங்கினேன்; நடிப்பு, இயக்கம் இரண்டையும் செய்தேன். அப்போதுதான் ஒரு நடிகர் எவ்வளவு கடுமையாக உழைக்கிறார் என்பதை உணர்ந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.