கல்கி 2ம் பாகத்தில் தீபிகா இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு | தங்கை என அழைத்து என் இதயத்தை நொறுக்கினார் : அஜித் மீதான கிரஷ் குறித்து நடிகை மகேஸ்வரி | பிளாஷ்பேக்: ரஜினி பட கிளைமாக்சை மாற்றிய ஏவிஎம் சரவணன் | பிளாஷ்பேக்: பண்டரிபாயை தெரியும், மைனாவதியை தெரியுமா? | சவுந்தர்யாவுடன் சேர்ந்து நானும் போயிருக்க வேண்டியது : மீனா பகிர்ந்த புதிய தகவல் | நான் சிறுவனாக இருந்தபோது எங்களுக்கு முதல்வராக இருந்தவர் மோடி : உன்னி முகுந்தன் பெருமிதம் | மோகன்லாலுக்கே தெரியாமல் அவர்மீது 12 வருட கோபம் : இயக்குனர் சத்யன் அந்திக்காடு புது தகவல் | நடிகர் சித்திக்கிற்கு அரபு நாடுகளுக்கு செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய நீதிமன்றம் | கமலின் அடுத்த படங்களின் இயக்குனர் பட்டியலில் இவரா? | பாலாவின் அடுத்த பட ஹீரோ: தமிழக தொழிலதிபர் வீட்டு வாரிசு? |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக பயணித்து வருபவர் உபேந்திரா. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த்தின் நண்பராக காளீசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார். இவரது மனைவி பிரியங்கா திரிவேதி. இவரும் நடிகை தான். தமிழில் அஜித்துடன் 'ராஜா' படத்தில் ஜோடியாக நடித்தவர். இந்த நிலையில் இவர்கள் இருவரது மொபைல் போன்களும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டன.
இந்த போன்களில் இருந்து அவர்களது நண்பர்கள் வட்டாரத்தில் உள்ள சிலருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்று பணம் கேட்டு மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விஷயம் ஒரு சில நண்பர்கள் மூலமாக உபேந்திரா மற்றும் பிரியங்கா இருவருக்குமே தெரிய வந்தது. உடனடியாக இருவருமே தங்களது சோசியல் மீடியாவில் தனித்தனி வீடியோக்களை வெளியிட்டு ''எங்களது மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதனால் அதிலிருந்து பணம் கேட்டு வரும் மெசேஜ் நாங்கள் அனுப்பியது இல்லை. தயவு செய்து அதை புறக்கணியுங்கள். எங்கள் போன்கள் மீட்கப்பட்டதும் நாங்களே தகவல் தெரிவிக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.