மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் |

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் கல்கி 2898 ஏடி. 2024ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். கமல் வில்லனாக நடித்தார். படம் 1100 கோடி வசூலித்தது. இந்த படத்தில் தீபிகா படுகோனே சுமதி என்ற முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அந்த வேடத்தில் அவரே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து தீபிகா படுகோனே விலகிவிட்டதாக அறிவித்தார்கள். இதனால் கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரது வேடத்தில் சாய் பல்லவி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது ராஜமவுலியின் வாரணாசி படத்தில் நடித்து வரும் பிரியங்கா சோப்ராவை தீபிகா படுகோனே நடித்த வேடத்தில் நடிக்க வைக்க கல்கி படத்தை தயாரிக்கும் வைஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.