தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' |

கடந்த 2023ல் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.. அதனை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் ஜெயிலர் 2 என்கிற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் ரஜினிகாந்தின் நண்பர்களாக நடித்த சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் இருவரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் மலையாளத்தில் மோகன்லால் தான் நடித்து வந்த திரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் நிறைவு செய்துள்ள நிலையில் அடுத்ததாக ஜெயிலர் 2 படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளார். ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக அவர் கேரளாவில் இருந்து விமான பயணம் மேற்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இதை உறுதிப்படுத்தி உள்ளது.