தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
காமெடி நடிகர் ரோபோ சங்கர், (வயது 46) சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (செப்.,18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
துணை முதல்வர் உதயநிதி, நாம் தமிழர் கட்சியின் சீமான், விசிக திருமாவளன், தேமுதிக.,வின் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன், மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், ரோபோ சங்கரின் உடல், ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவன் நகர் மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
நடனமாடி வழியனுப்பி வைத்த மனைவி
ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன், உடல் முன்பு அவரது மனைவி பிரியங்கா நடனமாடி கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தார். ரோபோ சங்கர் மறைந்தாலும் அவரின் காமெடிகள் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும்.