வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாள திரையுலகில் 2000களின் துவக்கத்திலிருந்து முன்னணி நடிகையாக கிட்டத்தட்ட 2011 வரை வலம் வந்தவர் நடிகை காவ்யா மாதவன். தமிழில் 'என் மன வானில், காசி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை பி மாதவன் உடல்நல குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். இவரது வயது 75. கேரளாவில் காசர்கோடு பகுதியில் உள்ள நீலேஸ்வரம் தான் இவரது சொந்த ஊர். இந்த நிலையில் இவரது உடல் சென்னையிலிருந்து இறுதிச் சடங்குகளுக்காக அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இவருக்கு சியாமளா என்கிற மனைவியும், காவ்யா என்கிற மகளும், மிதுன் என்கிற மகனும் இருக்கின்றனர். மகன், மருமகள் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றனர். நடிகர் திலீப் இவரது மருமகன் தான். காவ்யா மாதவன் 2009ல் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து, பின் 2011ல் விவாகரத்து பெற்றார். அதன் பிறகு தன்னுடன் பல படங்களில் இணைந்து ஜோடியாக நடித்த நடிகர் திலீப்பை 2016ல் மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகாலட்சுமி என்கிற மகள் இருக்கிறார்.